எண்ணெய்... வேண்டாம் என்று சொல்லுபர்கூட பஜ்ஜி என்றால் சிறிது யோசிக்க தான் செய்வார்கள். நம் தமிழ்நாட்டில், மக்கள் பஜ்ஜி எண்ணெயாக இருந்தால், ஒரு பேப்பரை தேடுவோம தவிர, ஒரு கடி பஜ்ஜியும் ஒரு வாய் டீயும் மிஸ் பண்ணமாட்டோம்.
ஒரு இனிய மாலை பொழுதில் பஜ்ஜி செய்யலாம் என்று எண்ணினேன். அன்று எங்கள் வீட்டில் வாழைக்காய் இல்லை, அதனால் உருளை கிழங்கு மற்றும் வெங்காயம் வைத்து பஜ்ஜி செய்யலாம் என்று ஆரம்பித்தேன். என் கணவர் உருளை கிழங்கு உள்ளது என்றால், மிகவூம் பிரியமாக சாப்பிடுவார். ஆனால், அன்று அவர் இந்த வெங்காய பஜ்ஜி தான் விரும்பி சாப்பிட்டார் . அதலால் உங்களிடம் சந்தோசமாக பகிர்கிறேன்.
தேவையானவை:
ஒரு கப் கடலை மாவு
இரண்டு பெரிய வெங்காயம்
2-3 டீஸ்பூன் மிளகாய் வத்தல் போடி
1 டீஸ்பூன் அரிசி மாவு
1 டீஸ்பூன் ரவை
சிறிது காயம்
தேவைகேற்ப உப்பு
தேவைகேற்ப தண்ணீர்
தேவைகேற்ப எண்ணெய் (பொரிக்க)
செய்முறை:
1) ஒரு அகன்ற பத்திரத்தில் மேல் உள்ள அனைத்து பொருட்களையும்(எண்ணெய் தவிர) போட்டு, தண்ணீர் கொண்டு இட்லி மாவு பதத்தில் விரவவும்.
பின்பு வெங்காயத்தை மெலிதாக நறுக்கி வேண்டும்.
2) நறுக்கிய வெங்காயத்தை விரவிய மாவில் இட்டு, பின்பு எண்ணையில் பொரிக்கவும்.
கவனிக்க:
- எண்ணெய் சிறிது சூடாகவே தான் இருக்க வேண்டும், அல்லது பஜ்ஜி அதிகம் எண்ணெய் உட்கொள்ளும் (குடிக்கும்).
இந்த சூடான வெங்காய பஜ்ஜியும் ஒரு கிளாஸ் டீயும் உங்கள் மாலை பொழுதை இனிமையாக மாற்றும்.
No comments:
Post a Comment