Saturday, November 8, 2014

உளுந்தம் பருப்பு கஞ்சி

                        நான் சின்ன பிள்ளையா இருக்கும்  போது எங்க வீட்டுல இந்த கஞ்சிய அநேகமா எல்லா வரமும் செஞ்சிருவாங்க. அப்பலாம் இந்த கஞ்சிய பாத்தாலே நான் ஓடிருவேன், ஏன்னா அது வழுவழுன்னு இருக்கும். ஆனா அதோட  அரும இப்பதான் தெரியுது.

                       "ஏல அவன் தும்முறான், அவனுக்கு உளுந்தம் பருப்பு கஞ்சிய போட்டு குடுல"னுதான், எங்க ஊருல எல்லாரும் சொல்லுவாங்க. எங்க ஊருல யாருக்காச்சும் சளி பிடிச்ச இதுதான் மொதல் வைத்தியம்.

                      இந்த அருமையான கஞ்சில இருக்கிற உளுந்தம் பருப்பு, கற்பட்டி, பூண்டு, சுக்கு, தேங்கா எல்லாமே உடம்புக்கு ரொம்ப நல்லது.


தேவையானவை: 

ஒரு கப் உளுந்தம் பருப்பு 

1/2 கப் கற்பட்டி / வெல்லம் துருவியது
3-4 கப் தண்ணீர்
இரண்டு பூண்டு
1/4 கப் தேங்காய் துருவியது 
ஒரு இன்ச் அளவு சுக்கு
ஒரு கப் பால் (தேவையென்றால்) 

செய்முறை: 
1) ஒரு குக்கரில் உளுந்தம் பருப்பு, உரிச்ச பூண்டு,சுக்கு  எல்லாம் போட்டு 15 நிமிஷம் வேக வைங்க. 
கற்பட்டி அல்ல வெல்லத்தை பாகா காச்சி, வடிகட்டிகோங்க.



    

2) எல்லாம் நல்ல வெந்த உடனே, காச்சின பாகயும் துருவின தேங்காயும் போட்டு 3-5 நிமிஷம் மறுபடியும் வேக விடுங்க. 
தேவைபட்டால் காச்சின பாலையும் உத்தி  2-3 நிமிஷம் மறுபடியும் வேக விடுங்க.

                       கவனிக்க:

  • கருப்பு உளுந்து வச்சும் இந்த கஞ்சி பண்ணலாம்.
  • பால் சேர்ப்பதை பொறுத்து, தண்ணீ அளவை கூட்டி கொறைக்க வேண்டியதாம்.




No comments:

Post a Comment